தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
பிரிஞ்சி இலை – ஒன்று
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
தக்காளி – ஒன்று
காரட், பீன்ஸ், காலிபிளவர் – ஒரு கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
கலர் – ஒரு சிட்டிகை (தேவையானால்)
தண்ணீர் – அரை டம்ளர்
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
இடியாப்பம் – முன்று கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, காரட், பீன்ஸ், காலிபிளவர், மிளகாய் தூள், உப்பு, கலர், சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து முக்கால் பாகம் கிரைவி எடுத்து தனியாக வைத்துகொள்ளவும்.
கால் பாகம் கிரைவின் மேல் இடியாப்பம் (பாதி) உதிரி செய்து தூவவும்.
பிறகு முக்கால் பாகம் கிரைவி துவி விடவும், பிறகு மீதி உள்ள இடியாப்பம் துவி, கொத்தமல்லி, புதினா துவி, நெய் விட்டு கிளறாமல் மூடிபோட்டு விட்டு முன்று நிமிடம் கழித்து எடுத்து சூடாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு பிடித்த டிஷ்.
குறிப்பு: முன்று நிமிடகளுக்கு மேல் விடக்குடாது.